செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2025 (09:36 IST)

நவராத்திரி முதல் நாள் பிரசாதம்: கொண்டைக்கடலை சுண்டல் செய்வது எப்படி?

Kondaikadalai sundal

துர்கா தேவி மகிஷாசூரனை அழித்த நாள் நவராத்திரியாக இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 9 நாட்களும் மாலையில் கொழு வைத்து, அக்கம் பக்கத்தினரை அழைத்து பஜனைகள் செய்து, துர்கா தேவியை வணங்குவது தேவியின் பரிபூரண அருளாசியை வழங்கும்.

 

தினசரி 9 நாட்களும் கொழு பூஜை செய்து பிரசாதம் வழங்குவது வழக்கம். அவ்வாறாக ஒவ்வொரு நாளும் ஒரு பிரசாதம் வழங்கப்படுகிறது. முதல் நாளில் கொண்டைக்கடலையில் செய்யப்படும் சுண்டல் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 

ஸ்பெஷல் கொண்டைக்கடலை சுண்டல் செய்வது எப்படி?

 

தேவையான பொருட்கள்: கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை, தேங்காய் துறுவியது, வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு தேவையான அளவு

 

கொண்டைக்கடலை சுண்டல் செய்ய கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் அகன்ற பாத்திரம் வைத்து, அதில் ஊற வைத்த கொண்டைக்கடலையை உப்பு போட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

 

ஒரு எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும். பின்னர் வேக வைத்தக் கொண்டைக்கடலையை அதனுடன் சேர்த்து கிளறி எடுத்தால் பிரசாதத்திற்கு கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

 

Edit by Prasanth.K