வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (13:43 IST)

இரசாயன கலவையற்ற பொருட்கள் - மஹாபெரியவா நிறுவனம் அறிமுகம்!

இரசாயன கலவையற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள், வீட்டு உபயோக மளிகைப் பொருட்களை "மஹாபெரியவா" என்ற பெயரில்  MOFPCL  என்று அழைக்கப்படும் மஹாபெரியவா இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சென்னையில் அறிமுகப்படுத்தியது.

 
உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு துவங்கப்பட்டுள்ள மஹாபெரியவா இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இரசாயன கலவையற்ற ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்களை ""மஹாபெரியவா"" என்ற பெயரில்  இன்று முதல் (4.2.2021) விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
 
MOFPCL  நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ஹரிகுமார் சுப்ரமணியம் கூறுகையில் இந்த நிறுவனம் உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த அதிமுக்கியத்துவம் அளிக்கிறது என்றும் உற்பத்தியாளர் நலன், உற்பத்தி பெருக்கம், தரமான விளைப்பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கு தனிக் கவனம் செலுத்தும் வகையில் அனைத்து Backward linkages மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுக்கும். 
 
பால் மற்றும் பால்பொருட்கள் பகுதியில் தரமான பசும் பால், தரமான பசு நெய், வெண்ணை, பனீர் போன்ற பொருட்களை சென்னையில் உத்தேசித்துள்ள 40க்கும் மேற்பட்ட விநியோகஸ்தரர்கள் மூலம் நுகர்வோருக்கு விநியோகிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.  நுகர்வோர் உடல் நலனை பேணும் வகையில் தரமான  இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களை முதற்கட்டமாக 5000 லிட்டர் வரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில் முருங்கை இன்று உடல்  நலம் பேணும் உணவுப் பொருட்கள் பட்டியலில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனை பெருமளவில் உற்பத்தி  செய்யும் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு முருங்கை இலைப் பொடி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட Capsule ஆகியவற்றை விநியோகிக்க நடடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
 
ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்து Latex-I எடுத்து வந்து நிலை நிறுத்தும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தர மேம்பாடு செய்து ரப்பர் ஷீட்டுகளை தயாரிக்கும் பணியில் ஒரு   டயனே அயசம- கினை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
 
மஹாபெரியவா இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அடுத்த நிதியாண்டில் 3500 உற்பத்தியாளர்களை இந்நிறுவனத்தில் இணைக்கவும், ரூபாய் 100 கோடி (TURN OVER)  விற்று முதல் கொண்டு வர அனைத்து தரப்பு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்ததுடன் சென்னையில் முதற்கட்ட துவக்க விழா இன்று நடைபெற்றதாகவும்,  சுமார் ஒரு இலட்சம் நுகர்வோர் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.