செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (15:37 IST)

வங்கிகள் இயங்கும் நேரம் மீண்டும் மாற்றம் ! 2 மணிநேரம் குறைப்பு!

கொரோனா காரணமாக வங்கிகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வங்கிகள் இயங்கும் நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பணப் பரிவர்த்தனைத் தவிர மற்ற வேலைகள் எதுவும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளுக்கான கிஸான் திட்டப் பணம், ஜன்தன் பணம் மற்றும் சமையல் எரிவாயுக்களானப் பணத்தை வங்கிக் கணக்கில் போட்டதால் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமானதை அடுத்து இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்பட்டது. அதையடுத்து இப்போது மீண்டும் 20 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பழைய படி 10 மணி 2 மணி வரை மட்டுமே இயங்கும் என மாநில வங்கிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.