1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. fathima vijay antony explain about chappals

மகளுக்காக செருப்பு போடுவதை நிறுத்திய விஜய் ஆண்டனி!.. இப்படி ஒரு பாசமா?..

vijay antony
ஏற்கனவே சில படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. ஏனெனில் இந்த திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின் விஜய் ஆண்டனி அனைத்து படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திராவிலும் வெளியாகி வருகிறது.

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. விரைவில் அவரின் அப்பாக்குட்டி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தனது மனைவி மற்றும் இளைய மகளுடன் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார்.

விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா 3 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த மேடையில் பேசிய விஜய் ஆண்டனியின் என் மனைவி பாத்திமா ‘விஜய் ஆண்டனி ஏன் செருப்பு அணிந்து கொண்டு வருவதில்லை என பலருக்கும் தெரியாது.

இறந்து போன எங்கள் மகள் மீராவிடம் 50க்கும் மேற்பட்ட ஜோடி செருப்புகள் இருந்தன. அவள் காலேஜ் செல்வதற்காக அதை வாங்கி வைத்திருந்தோம். ஆனால் அதையெல்லாம் அணிவதற்கு முன்பே அவள் எங்களை விட்டு சென்றுவிட்டாள். அந்த செருப்புகளை எல்லாம் பார்த்தபோது ‘இனிமேல் நான் வாழ் நாள் முழுவதும் செருப்பு போட மாட்டேன்’ என்று விஜய் ஆண்டனி கூறிவிட்டார்’ என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பாக்ஸ் ஆபிசில் கலக்கும் சீன்!.. 11 நாளில் இவ்ளோ கோடி வசூலா?...