1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. jananayagan movie producer helping vijay antony movie

விஜய் ஆண்டனி படத்துக்கு வந்த சிக்கல்!.. கை கொடுத்த ஜனநாயகன் தயாரிப்பாளர்!..

vijay antony
அயோத்தி என்கிற ஃபீல் குட் திரைப்படத்தை கொடுத்து கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மந்திர மூர்த்தி. அந்த படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின்  படப்பிடிப்பு துவங்கி வேகமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென இந்த படம் சிக்கலை சந்தித்திருக்கிறது. அதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் என்கிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் புதியவர் என்பதாலும் அவரால் படத்திற்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்க முடியவில்லை என்பதாலும் படம் நிறுத்தப்பட்டது.

அதன்பின் இந்த படத்தின் கதையை விஜயை வைத்து ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என் நிறுவனம் வெங்கட் நாராயணாவிடம் கூறியுள்ளனர். அவர் இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என முன் வந்திருக்கிறாராம். தற்போது மீண்டும் இந்த பட வேலைகள் துவங்கியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
போங்கடா நான் பழைய ரூட்டுக்கே போறேன்!.. மீண்டும் கோவா ஸ்டைலில் படமெடுக்கும் விபி!...