1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (06:37 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு 5வது தோல்வி: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்னர் பலமான அணிகளில் ஒன்றாகவும், கோப்பையை வெல்லும் அணி என்றும் கருதப்பட்ட தென்னாப்பிரிக்கா அணி, படுமோசமாக விளையாடி வருகிறது. முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4ல் தோல்வி அடைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் அணியுடனான நடந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்ததால் இந்த அணிக்கு இது ஐந்தாவது தோல்வியாக அமைந்துள்ளது. எனவே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தென்னாப்பிரிக்கா அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 308 ரன்கள் குவித்தது. 309 என்ற இலக்கை நோக்கி விளையாடி தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. டூபிளஸ்சிஸ் 63 ரன்களும், ஃபெலுவாக்கியோ 46 ரன்களும், டீகாக் 47 ரன்களும் எடுத்தனர். 89 ரன்கள் எடுத்த பாகிஸ்தானின் ஹரிஸ் சோஹெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை 30 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இந்தியா 9 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் இங்கிலாந்து 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளது.கடைசி மூன்று இடங்களில் உள்ள ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது