வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2019 (06:44 IST)

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்: ஆப்கானிஸ்தானுக்கு 8வது தோல்வி

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 36வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் அணி கடைசி இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்து கொண்டது
 
இந்த உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. அடுத்ததாக இந்திய அணியுடன் மோதவிருக்கும் நிலையில் இந்த போட்டியிலும் தோல்வி அடைந்தால் அந்த அணி ஒரு வெற்றியை கூட ருசிக்காமல் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
ஆப்கானிஸ்தான்: 227/9  50 ஓவர்கள்
 
அஸ்கர் ஆப்கன்: 42
ஜாட்ரான்: 42
ரஹ்மத் ஷா: 35
இக்ரம் ஐகில்: 24
 
பாகிஸ்தான்: 230/7  49.4 ஓவர்கள்
 
இமாத் வாசிம்: 49
பாபர் அசாம்: 45
இமாம் உல் ஹக்: 36
ஹரிஸ் சோஹைல்: 27
 
ஆட்டநாயகன்: இமாத் வாசிம்
 
இன்றைய போட்டி: இந்தியா மற்றும் இங்கிலாந்து