திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (17:05 IST)

கோலியா? தோனியா? யுவராஜ் சிங் பதில்!

கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றிகளோடு ஏகப்பட்ட காயங்களையும் கண்ட வீரர் யுவராஜ் சிங். இவர் இந்திய அணியின் சிறந்த வீரர்களுள் ஒருவர். சமீபத்தில் இவர் ஒரு ஸ்போட்ஸ் இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இந்த பேட்டியின் போது பல கிரிக்கெட் சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், கோலி, தோனி ஆகியோரின் கேப்டன்சி பற்றியும் பேசியுள்ளார். அவர் கூறிய சில கருத்துக்கள் பின்வருமாறு...
 
கோலி, தோனியை காட்டிலும் வித்தியாசமானவர். தோனி அமைதியானவர். கோலி ஆக்ரோஷமானவர். தோனி கேப்டன் ஆன போது அவருக்கு அனுபவ வீரர்கள், மேட்ச் வின்னர்கள் அணியில் இருந்தனர். 
 
ஆனால், கோலியின் கீழ் அணி உருமாற்றம் அடைந்துள்ளது. கோலி உடல்தகுதியில் சிறந்து விளங்குபவர், கண்டிப்பானவர். எனவே, அணி வீரர்களிடத்திலும் இதனை எதிர்பார்க்கிறார். 2019 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு கோலி சரியான திசையில் செல்வதாகவே உணர்கிறேன் என கூறியுள்ளார்.