விண்வெளிக்கு சென்ற 50 ஓவர் உலகக் கோப்பை… தொடரை பிரபலப்படுத்த வித்தியாச முயற்சி!
13 ஆவது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று தொடர் தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்தியா போன்ற அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுவிட்டன.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரை பிரபலப்படுத்த வித்தியாசமான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகக் கோப்பை டிராபி பிரத்யேகமான ஒரு பலூனில் பொருத்தப்பட்டு விண்வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது பூமியில் இருந்து 1.20 லட்சம் அடி தூரத்தில் இந்த கோப்பை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இப்படியே 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கோப்பை செப்டம்பர் 4 ஆம் தேதி மீண்டும் இந்தியாவுக்கு வரவுள்ளது.