இரட்டை சதம் அடித்தார் வாசிம் ஜாபர்!

wasim
Last Modified வியாழன், 15 மார்ச் 2018 (19:13 IST)
இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக  இரட்டை சதம் அடித்துள்ளார் வாசிம் ஜாபர்.

 
 
இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மென் வாசிம் ஜாபர் (40). 31 டெஸ்ட் போட்டிகளில் 1944 ரன்கள் அடித்துள்ளார். அதில் 11 சதங்கள் அடங்கும்.
 
இவர் தற்போது இரானி கோப்பை தொடரில் ரஞ்சி டிராபி வரோதா அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக தொடங்கிய போட்டியில் நிதானமாக விளையாடிய வாசிம் ஜாபர் இரட்டை சதம் அடித்துள்ளார். மேலும், அவுட்டாகமால்  களத்தில் உள்ளதால் அவர் நாளைக்கு முச்சதம் அடிப்பார் என எதிப்பார்க்கபடுகிறது.
 
இந்த இரட்டை சதத்தின் மூலம் 40 வயது கடந்த இந்திய வீரர்களில் இரட்டை சதம் அடித்த 5-வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :