திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 30 டிசம்பர் 2023 (07:21 IST)

இலங்கை டி 20 கிரிக்கெட் அணிக்கு இவர்தான் புதிய கேப்டன்!

கிரிக்கெட் பிரபலமாக உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கை கிரிக்கெட் வாரியம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதுடன் இலங்கை அணி வீரர்கள் ஆசியக்கோப்பை, உலக கோப்பை என பல போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். சமீபமாக பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் கிரிக்கெட் வாரியத்தின் மீது அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஐசிசி நிர்வாகம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக கிரிக்கெட்டில் இலங்கை அணியும் மிகவும் தடுமாறி வரும் நிலையில் அணிக்கு புத்துணர்ச்சி ஊட்டும் நிலையில் அந்த அணியின் டி 20 கிரிக்கெட்டுக்கு புதிய கேப்டனாக வனிந்து ஹசரங்கா இப்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.