பிரதமர் சொல்றதை கேளுங்க..! – வீடியோ வெளியிட்ட விராட் கோலி

kohli
Prasanth Karthick| Last Modified சனி, 21 மார்ச் 2020 (08:53 IST)
நாளை மக்கள் ஊரடங்கு செயல்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ள நிலையில் அதற்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் மக்கள் ஊரடங்கை செயல்படுத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வெளியே நடமாடாமல் வீட்டிற்குள் இருக்கு அறிவுறுத்தியுள்ளார். மாநில அரசுகளும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமரின் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, அவர் மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடியின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மக்கள் கருத்தில் கொண்டு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தம்பதியர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அவர்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :