வயசானாவே இப்படி தான்... கோலி குறித்து கபிள் தேவ்!
இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து முன்னாள் வீரர் கபிள்தேவ் பேசியுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிராக நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே இந்தியா பயங்கரமான தோல்வியை தழுவியது. இரண்டு டெஸ்ட்களிலும் சேர்த்து விராட் கோலி மொத்தமாக 38 ரன்கள் மட்டுமே பெற்றிருந்தார். மேலும் ஆடுகளத்தில் அவரது பங்களிப்பு, அணியை வழிநடத்தியதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக பலர் அவரை விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் கபில்தேவ் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, களத்தில், இன் ஸ்விங் பந்துகளை லாவகமாக பவுண்டரிகளுக்கு விரட்டும் கோலி, இத்தொடரில் அத்தகைய பந்துகளில் அவுட் ஆனார்.
பொதுவாக 30 வயதை தாண்டினால் ஏற்படும் கண் பார்வை திறன் பிரச்சினை கோலிக்கும் ஏற்பட்டிருக்கலாம். இத்தகைய பிரச்சினைகளை களைய, கோலி கூடுதல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.