வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (14:02 IST)

புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர் மரைஸ் எராஸ்மஸ் ஓய்வு அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முதல் தர கிரிக்கெட் பிளேயரான மராய்ஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நடுவராக பணியாற்றி வருகிறார்.  2006 ஆம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.

அதுமுதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட் சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றியுள்ளார். ஐசிசி வழங்கும் சிறந்த வீரருக்கான விருதை மூன்று முறை வென்றுள்ளார்.

தற்போது 61 வயதாகும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.