ஸ்டார்க்கிற்குப் பதிலாக கொல்கத்தா அணியில் டாம் குர்ரான்

starc
Last Modified திங்கள், 2 ஏப்ரல் 2018 (11:11 IST)
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மிட்சல் ஸ்டார்க்கிற்குப் பதிலாக கொல்கத்தா அணியில் டாம் குர்ரான் சேர்க்கப்பட்டுள்ளார்.

 
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோத உள்ளன.
starc
 
அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின் போது வலது காலில் ஏற்பட்ட காயத்தினால் ஐபிஎல் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் விலகினார். இதனால் அவர் விளையாடும் கொல்கத்தா அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என கருதப்பட்டது
 
இந்நிலையில், இவருக்கு பதிலாக கொல்கத்தா அணியில் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரான் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :