1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: வெள்ளி, 31 மார்ச் 2023 (09:04 IST)

“தோனிக்குப் பதில் என்னைக் கேப்டனாக சொன்னபோது…” ஸ்டீவ் ஸ்மித் சொன்ன கருத்து!

டெஸ்ட் போட்டிகளில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் மிக அதிக சராசரி வைத்திருக்கும் வீரர். மிகச்சிறந்த வீரராக விளங்கி வரும் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளிலும் மிகச்ச்சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். மறுபடியும் ஆஸி. அணியை சமீபத்தில் அவர் வழிநடத்தி ஒருநாள் தொடரை வென்றுகொடுத்தார். இன்று முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அவரை இந்த முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனையாளராகக் களமிறங்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தோனியோடு இணைந்து புனே அணியில் விளையாடியது பற்றியும் அந்த அணியை வழிநடத்தியது பற்றியும் பேசியுள்ளார். அதில் “தோனி இருக்கும் போது என்னைக் கேப்டன் பொறுப்பு ஏற்க சொன்ன போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் தோனி அப்போது மிகச்சிறந்த ஃபார்மில் இருந்தார். அவர் விளையாடிய அனைத்து அணிகளையும் வழிநட்த்தினார். ஆனால் அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டு நான் கேப்டனான போது தோனியைப் பற்றி முழுவதும் புரிந்துகொண்டேன்.” எனக் கூறியுள்ளார்.