இன்றைய 3வது ஒருநாள் போட்டியை நேரில் பார்த்த அனிருத் ..வைரல் புகைப்படம்
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான இன்றைய 3 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் பார்த்து வருகிறார்.
இன்று, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான 3 -வது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இரு போட்டிகளில் இரு அணிகளும்1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ள நிலையில்,இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 270 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணி தற்போது 47 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இன்னும் 14 பந்துகளில் வெற்றிக்கு 27 ரன்கள் எடுக்க வேண்டுமென்பதால் இரு அணிகளுக்கிடையேயான போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் பார்த்து வருகிறார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.