ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 25 அக்டோபர் 2023 (14:57 IST)

வாங்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை ! ரசிகர்கள் மகிழ்ச்சி

மும்பை வான் கடே  மைதானத்தில் சச்சின் சிலை வைக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டிற்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள் இதில் விளையாடுகின்றன.

சமீபத்தில் லீக் போட்டிகளுக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது.

இந்த நிலையில்,  அனைத்து அணிகள் சொந்த மண்ணில் விளையாடவுள்ள நிலையில், மும்பை அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரை கவுரவப்படுத்தும் விதமான அவரது சிலை இன்றை மும்பை வாங்கடே மைதானத்தில் நிறுவ உள்ளதாக தகவல் வெளியாகிறது.

சச்சின் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி தன் 50 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த மைதானத்தில்தான் அவர் தன் கடைசிப் போட்டியை விளையாடினார்.

எனவே  அன்று சச்சின் சிலை திறக்கப்படும் என கூறப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகள்,463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 34,357 ரன்கள் அடித்துள்ளார்.

இதில், சதத்தில் சதம் அடித்த முதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.