ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (16:15 IST)

சச்சினின் 50 ஆவது பிறந்தநாளில்… மும்பை மைதானத்தில் சிறப்பு கௌரவம்!

கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் அதன் கடவுள் சச்சின் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர் சச்சின். கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் சர்வதேசக் கிரிக்கெட் விளையாடிய அவர் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.சச்சின் டெண்டுல்கர் (1992-2011) ஆறு உலகக்கோப்பைகளில் விளையாடி சாதனை படைத்த அவர் சர்வதேசக் கிர்க்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் மற்றும் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனைக்கு எல்லாம் சொந்தக் காரராக உள்ளார்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி சச்சினின் 50 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு சச்சினை கௌரவிக்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் அவரது சிலை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.