மும்பை இந்தியன் பயிற்சியாளராக மீண்டும் இலங்கை வீரர்.. ஆகாஷ் அம்பானி அறிவிப்பு..!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் இலங்கையை சேர்ந்த மாஹேலே ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017 முதல் 2022 வரையிலும் மும்பை அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ஜெயவர்தனே, மும்பை அணி மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வகையில் தலைமையேற்று இருந்தார்.
பின்னர், அவரது பதவியில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டார். ஆனால், அவரின் பயிற்சியின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிகள் கிடைக்கவில்லை. அணியில் உள்ள வீரர்கள் இடையே ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் வந்தன.
இந்நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே மீண்டும் திரும்பினார். இதை மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Edited by Mahendran