1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2017 (16:05 IST)

291 ரன்களில் சுருண்ட இலங்கை; 369 ரன்கள் முன்னிலையில் இந்தியா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


 

 
இந்தியா - இலங்கை அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைப்பெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை 2வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டை இழந்து 154 குவித்தது. மூன்றாவது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
இலங்கை அணியில் அதிகபட்சமாக பெரிரா 92 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தற்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
 
இந்திய அணி தற்போது வரை 2 விக்கெட் இழப்பிறகு 56 ரன்கள் குவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த தவான், புஜாரா ஆகிய இருவரும் 2வது இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்தியா 369 ரன்கள் முன்னிலையில் உள்ளது.