ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2023 (14:14 IST)

லெஜண்ட்ஸ் லீக்கில் வார்த்தை மோதலில் ஈடுபட்ட கம்பீர் & ஸ்ரீசாந்த்!

ஓய்வு பெற்ற வீரர்கள் கலந்துகொள்ளும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் இப்போது நடந்து வருகிறது. இந்தியா கேபிடல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டியின் போது கம்பீர் பேட் செய்யும் போது பந்துவீசிய ஸ்ரீசாந்த் அவரை பார்த்து ஏதோ சொல்ல, முறைத்தார் கம்பீர். பின்னர் ஸ்ரீசாந்த் ஆறாவது ஓவரை வீசவந்த போது கம்பீர் ஏதோ சொல்ல ஸ்ரீசாந்த் அவரை நோக்கி செல்ல நடுவர்கள் வந்து இருவரையும் பிரித்தனர்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ரீசாந்த் கம்பீர் தன்னை மேட்ச் பிக்சர் எனக் கூறியதாகவும் மேலும் கெட்டவார்த்தை ஒன்றைக் கூறி திட்டியதாகவும் கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கம்பீர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் “சிலர் விளம்பரத்துக்காக எதையாவது சொல்லும் போது சிரிக்கதான் தோன்றுகிறது” எனக் கூறி தான் சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.