ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (15:06 IST)

சச்சினுக்கு 10 வருஷமாச்சு இதை செய்ய.. ஆனா ஜெய்ஸ்வால் ஒரே வருஷத்துல செஞ்சிட்டார்! – பார்த்தீவ் பட்டேல் ஆச்சர்யம்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் 10 ஆண்டுகளில் செய்த சாதனையை ஜெய்ஸ்வால் ஒரு வருடத்திலேயே செய்து விட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.



இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் அடித்த இரட்டை சதம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. ஜெய்ஸ்வாலின் சிறப்பான ஆட்டத்தை பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஆச்சர்யத்தோடு பாராட்டி வருகின்றனர்.

ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் “வான்கடே மைதானத்தில் ஜாம்பவன் வீரர்கள் பெறும் கைத்தட்டல்களை பார்த்தவர் ஜெய்ஸ்வால். அதை அவரும் கேட்க விரும்பி இருக்கிறார். அதே மைதானத்தில் டி20 தொடரில் சதமடித்து கைத்தட்டல்கள பெற்றார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் டி20 ஐ விட வித்தியாசமானது. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த ஜெய்ஸ்வால் தற்போது இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். பொதுவாக பலராலும் அடிக்கடி இரட்டை சதம் அடிக்க முடியாது. சச்சின், பாஜி கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்க 10 ஆண்டு காலம் ஆனது. ஆனால் ஜெய்ஸ்வால் அறிமுகமான 1 வருடத்திலேயே இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துவிட்டார்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K