1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shubman gill expected to be named to india next test captain

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

சாம்பியன்ஸ் கோப்பை
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இந்திய அணி படுமோசமாக இழந்ததே அதற்கு சாட்சி.

அந்த தொடரில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார். இந்நிலையில் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த முடிவை ரோஹித் அறிவித்துள்ளார்.

இதையடுத்து இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்தக் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் பும்ரா சிறப்பாக செயல்பட்டாலும், அவர் அடிக்கடி காயம் அடைவதால் பிசிசிஐ அவரை பரிசீலிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக 25 வயது இளம் வீரரான ஷுப்மன் கில் டெஸ்ட் அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!