தொடர்புடைய செய்திகள்
- சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!
- கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்?.. மனம் திறந்த விராட் கோலி!
- ஷமிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல்… அதில் இருந்தது என்ன?- காவல்துறையில் புகார்!
- “இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!
- ’கோவிந்தா.. கோவிந்தா..!’ திருப்பதியில் RCB கேப்டன் ரஜத் படிதார் சாமி தரிசனம்!
இந்திய டெஸ்ட் அணிக்குப் புதியக் கேப்டன்… ரோஹித் ஷர்மாவை நீக்க பிசிசிஐ முடிவு!
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இந்திய அணி படுமோசமாக இழந்தது. அந்த தொடரில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தானாகவே விலகிக் கொண்டார்.
இதனால் அவர் இனிமேல் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற மாட்டார் எனவும், டெஸ்ட் கேப்டன்சி அவரிடம் இருந்து பும்ராவுக்கு கைமாற்றப்படும் எனவும் தகவல் பரவியது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ரோஹித் ஷர்மா அணியில் ஒரு வீரராகத் தொடர்வார் என்று சொல்லப்படுகிறது. பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.