வியாழன், 19 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (10:57 IST)

’ஒரு சாமி.. ரெண்டு சாமி.. ஆறுச்சாமிடா..!’ - சாமி பட டயலாக்கை பேசி மாஸ் காட்டிய ஷிவம் துபே! – வைரலாகும் வீடியோ!

Shivam Dube
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஷிவம் துபே தமிழ் பட வசனத்தை பேசி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.



ஐபிஎல் அணிகளில் அதிகமான ரசிகர்களை கொண்ட முக்கியமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடும் எந்த வீரரும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விடுவார்கள். மேலும் ரசிகர்கள் அவர்களுக்கு பட்டப்பெயர்களும் வைத்து கொண்டாடுவார்கள். அப்படியாக தல தோனி, சின்ன தல ரெய்னா, தமிழ் புலவர் பாஜி (ஹர்பஜன் சிங்) என பலரும் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க சிஎஸ்கே வீரர்கள் பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில் தனக்கு தளபதி என்ற பட்டத்தை சிஎஸ்கே ரசிகர்கள் தருவதை தான் விரும்புவதாகவே ஜடேஜா கூறியிருந்தார். அதுபோல ஷிவம் துபேவுக்கு ரசிகர்கள் வைத்த செல்லப்பெயர்தான் ஆறுச்சாமி. முன்னர் சிஎஸ்கே அணியில் இருந்த டூ ப்ளெசிஸ் பவுண்டரி லைன்களில் பந்தை தடுப்பதால் அவர் எல்லைச்சாமி என்று அழைக்கப்பட்டார். அதுபோல தற்போது சிக்ஸர்களாக வெளுத்து வரும் துபேவை ரசிகர்கள் ‘ஆறுச்சாமி’ என சாமி படத்தில் வரும் கதாப்பாத்திரத்தை வைத்து அழைக்கின்றனர்.


இந்நிலையில் ஷிபம் துபேவின் வீடியோ ஒன்றை சிஎஸ்கே இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதில் ஷிவம் துபே “ஒரு சாமி.. ரெண்டு சாமி, மூனு சாமி, நாலு சாமி, அஞ்சு சாமி… ஆறு சாமிடா.. டெபுடி கமிஷனர் ஆப் சிக்ஸஸ். சென்னை சிட்டி” என நடிகர் விக்ரம் டோனிலேயே தமிழில் பேசியுள்ளார். முன்னதாக இதுபோல ரவீந்திர ஜடேஜா தமிழில் பேசிய வீடியொ வைரலான நிலையில், இப்போது ஷிவம் துபேவின் வீடியோவும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K