”இந்திய அணியில் எலலாம் சரியாக இருந்தாலும், ஒரு பிரச்சன இருக்கு…” ஆஸீ முன்னாள் வீரர் கருத்து!

வெள்ளி, 21 அக்டோபர் 2022 (09:19 IST)
இந்திய அணியின் பலவீனம் குறித்து ஆஸி அணியின் ஷேன் வாட்சன் கூறியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகக்கோப்பைக்காக அணிகள் தயாராகி வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் அணிகளின் செயல்பாடு மற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஆகியவை பற்றி கணித்து கூறி வருகின்றனர். இதில் அதிகமும் பேசப்படுவது இந்திய அணி பற்றிதான்.

இந்திய அணி குறித்து ஆஸி அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் ‘இந்திய அணியில் பேட்டிங் கூட்டணி பலமாக உள்ளது. அதுபோல சஹால் மற்றும அக்ஸர் போன்ற திறமையான சுழல்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்திய அணியின் பவுலிங் பலவீனமாகவே உள்ளது. இறுதி ஓவர்களை இப்போதுள்ள பவுலர்கள் திறமையாக கையாளுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை’ எனக் கூறியுள்ளார்.

பலரும் இந்திய அணியின் பவுலிங் பூம்ரா இல்லாமல் பலவீனமடைந்துள்ளதாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments