வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2023 (07:47 IST)

நாங்களே சோகத்துல இருந்தோம்… மோடி வருவார்னு எங்க கிட்ட யாருமே சொல்லல… ஷமி பகிர்ந்த தகவல்

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 24 விக்கெட்களை வீழ்த்தினார் முகமது ஷமி. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 15விக்கெட்களையும், 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 16 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் அவர் மொத்தமாக 55 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இத்தனைக்கும் அவரை தொடரின் ஆரம்பத்தில் இந்திய அணியில் சேர்க்கவில்லை.

ஷமியின் இந்த அபார பந்துவீச்சு ரசிகர்களை குஷிப்படுத்தினாலும், இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றதால் முழுமையான மகிழ்ச்சியை பெறமுடியவில்லை. இறுதிப் போட்டியில் தோற்ற இந்திய அணியினர் மைதானத்திலேயே தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.

அதே போலவே டிரஸ்ஸிங் ரூமில் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமலும், சாப்பிடாமலும் சோகத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென மோடி வீரர்களின் ஓய்வறைக்கு வந்து வீரர்களுக்கு ஆறுதல் சொன்னார். அது சம்மந்தமான வீடியோ இணையத்தில் பரவியது. அது பற்றி பேசியுள்ள ஷமி “பிரதமர் வருவார் என்று எங்களிடம் யாருமே சொல்லவில்லை. அவர் முன் சோகமாக நிற்கமுடியாது அல்லவா. கொஞ்சம் மரியாதையாக கொடுத்து நிற்க வேண்டும். அவர் வந்தது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ” எனக் கூறியுள்ளார்.