1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: வியாழன், 30 மார்ச் 2023 (09:09 IST)

டி 20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள்… ஷகிப் அல் ஹசன் சாதனை

வங்கதேசத்தை சேர்ந்த ஆல் ரவுனடரான ஷகிப் அல் ஹசன் அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய சாதனையை இப்போது அவர் படைத்துள்ளார்.

இதுவரை 114 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 136 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். இதற்கு நியுசிலாந்து வீரர் டிம் சவுத்தி 135 விக்கெட்கள் வீழ்த்தி இந்த சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.