தோனிக்கு பதில் இவரா? சிஎஸ்கே நிர்வாகத்தின் முன்னாள் ப்ளான்...

Last Modified புதன், 31 ஜனவரி 2018 (19:18 IST)
இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொச்டரான ஐபிஎல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் 11வது ஆண்சில் அடி எடுத்து வைத்துள்ளது.

2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஜடேஜா, ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர்.


ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதலில் துவங்கிய போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக சேவக்கை தேர்வு செய்ய சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்ததாம். இதன் பின்னர்தான் தோனி சிஎஸ்கே அணியில் நுழைந்தாராம்.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரிகள் முதலில் தோனிக்கு பதிலாக சேவக்கை ஒப்பந்தம் செய்ய விரும்பினார்கள். ஆனால், தோனி சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், கேப்டன். இது அனைத்திலும் தனித்தன்மை பெற்றவர். எனவே இதனை கருத்தில் கொண்டு அதன்பின் நிர்வாகிகள் தங்களின் முடிவை மாற்றிக்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :