சேவாக், அஸ்வின் இருவருக்கும் அவசரம் : மனைவிகள் கலாய்ப்பு


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 14 அக்டோபர் 2016 (13:27 IST)
வீரேந்திர சேவாக் மற்றும் அஸ்வின் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட ட்விட்டர் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.
 
 
இந்தியா-நியூசிலாந்து இடையிலான 4ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில் ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது இரண்டையும் அஸ்வின் கைப்பற்றினார்.
 
இந்நிலையில், அவருக்கு முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், ”7ஆவது முறையாக தொடர் நாயகன் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். திருமணமான ஒருவருக்குத் தான் வீட்டுக்கு செல்லும் அவசரம் தெரியும்” என்று கிண்டலடித்து இருந்தார்.
 

 
இதனை அஸ்வின் விளையாட்டாக எடுத்துக் கொண்டாலும், அஸ்வினின் மனைவி பிரீத்தியோ, ’நான் அப்படி ஒன்றும் செய்யவில்லையே’ என இருவருக்கும் பதில் டுவிட் போட்டிருந்தார்.
 

 
அதே சமயம் இந்த உரையாடலில் பங்கெடுத்த சேவாக்கின் மனைவி ஆர்த்தியும், “நானும்கூட ஒற்றும் செய்யவில்லையே. இருவருக்கும் எப்போதும் அவசரம் தான்” என பதிலுக்கு கலாய்த்துள்ளார். இந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :