வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

இந்திய அணியில் சஞ்சு சாம்சன்… முதல் விக்கெட் கீப்பராக முன்னுரிமை!

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

9 ஆண்டுகளில் அவர் இதுவரை 16 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 25 டி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டனாக விளையாடி வரும் நிலையில் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாதது குறித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அவர் தலைமையேற்றிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அவருடைய பேட்டிங்கும் மிகச்சிறப்பாக உள்ளது. இந்நிலையில் ஜுன் மாதம் நடக்க இருக்கும் டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அவர் இடம்பெறுவார் என பிசிசிஐ வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. அணியின் விக்கெட் கீப்பராக அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.