வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 25 மே 2024 (06:43 IST)

எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்… இறுதிப் போட்டி பட்டாசாக இருக்கும் – RR கேப்டன் சஞ்சு சாம்சன்!

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பத்திலேயே சீரான வரிசையில் விக்கெட்டுகளை இழந்தது. க்ளாசன் மட்டும் ஓரளவு நிலைத்து விளையாடி 50 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே ஐதராபாத் எடுத்துள்ளது.

இந்த எளிய இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐதராபாத்தை விட மிக மோசமாக பேட் செய்தது. அந்த அணி பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட நிலைத்து நின்று ரன்கள் சேர்க்கவில்லை. அந்த அணியின் ஜெய்ஸ்வால் 42 ரன்களும் துருவ் ஜுரெல் 55 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மிகக் கச்சிதமாக பந்து வீசிய சன் ரைசர்ஸ் பவுலர்கள் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்தனர்.

இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து பேசிய சஞ்சு சாம்சன் “ஆடுகளம் இரண்டாவது பாதியில் எதிர்பாராத விதமாக செயல்பட்டது. அதை சன் ரைசர்ஸ் ஸ்பின்னர்ஸ் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த சீசனில் நாங்கள் சில பிரம்மிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றோம். எங்கள் வீரர்களை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். இந்த சீசனில் எங்கள் அணியில் இருந்து இரண்டு வீரர்கள் இந்திய அணிக்குக் கிடைத்துள்ளனர். இறுதிப் போட்டியில் இந்த ஆடுகளம் இரு அணிகளுக்கும் சிறப்பாக இருக்கும். அதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.