1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2024 (09:18 IST)

பாலினத்தை மாற்றிக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன்…!

இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான சஞ்சய் பாங்கர் தற்போது தனிப் பயிற்சியாளராக செயல்பட்டு பல வீரர்களை உருவாக்கி வருகிறார். இவர் இந்திய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் சஞ்சய் பாங்கரின்  மகனான ஆர்யன் பாங்கர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது அனன்யா என்ற பெண்ணாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். தன்னுடைய புதிய புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட அந்த புகைப்படம் கவனம் பெற்றுள்ளது.

ஆர்யன் இடதுகை பேட்ஸ்மேனாக பயிற்சி செய்துவந்தார். இப்போது பெண்ணாக மாறியுள்ளதால் அவர் பெண்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.