செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2024 (09:05 IST)

இன்னும் எதாவது சாதனை பாக்கி இருக்கா?... அடித்து நொறுக்கி செல்லும் ரொனால்டோ!

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையை அவரிடம்தான் உள்ளது.

கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் கோப்பைகளையும் வென்றுவிட்டாலும், இன்னும் ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையை தனது அணிக்காக வெல்லவில்லை. தற்போது 38 வயதாகும் ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் 900 கோல்கள் அடித்து புதிய சாதனையைப் படைத்தார்.

இப்படி நாளுக்கு ஒரு சாதனையை நிகழ்த்தி வரும் ரொனால்டோ நேற்று போலந்துக்கு எதிரான போட்டியை வென்றதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றியைப் பெற்ற வீரர் என்ற ஸ்பெயினின் செர்ஜியோ ரமோஸின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் 131 சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.