1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 15 ஜூலை 2018 (13:14 IST)

இந்திய அணியின் முதுகெலும்பு இவர்கள்தான்: கங்குலி

ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர்தான் இந்திய அணியின் முதுகெலும்பு என்று முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

 
இந்திய அணியின் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து 322 ரன்கள் குவித்தது. 
 
இந்த இமாலய இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ரோகித், தவான், ராகுல், கோஹ்லி ஆகியோர் விரைவில் களத்தை விட்டு வெளியேற இந்திய அணி திணறியது.
 
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது:-
 
ரசிகர்கள் கோஹ்லி இங்கிலாந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறிவருகிறார்கள். அவர் கண்டிப்பாக சதம் அடிப்பார். ரோகித் சர்மாவும், விராட் கோஹ்லியும் இந்திய அணியின் முதுகெலும்பு என்று கூறியுள்ளார்.