வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (15:30 IST)

துப்பாக்கி மற்றும் வாளை வைத்து பூஜை செய்த ஜடேஜாவின் மனைவி!

இந்திய அணிக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருபவர் ரவிந்தர ஜடேஜா. மூன்று வடிவ போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை அணிக்காக விளையாடி வரும் சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி 20 போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.

அரசியல் தரப்பில் பாஜக ஆதரவாளராக ஜடேஜா தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். இந்நிலையில் வரும் குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஜடேஜாவின் மனைவி ரிவாபா, பாஜக சார்பாக குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஆயுதபூஜை கொண்டாடும் போது தன்னுடைய துப்பாக்கி மற்றும் வாள் ஆகியவற்றை வைத்து பூஜை நடத்தியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் பரவி அவருக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.