செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 1 ஜூன் 2024 (06:24 IST)

இந்திய ஜெர்ஸியை அணிவது இனிமையானது… கம்பேக் குறித்து ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.

அவர் தலைமையில் டெல்லி அணி ப்ளே ஆஃப் செல்லவில்லை என்றாலும் அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. அவர் 400+ ரன்களை சேர்த்தார். இதன் மூலம் அவர் டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடுவது குறித்து பேசியுள்ள ரிஷப் பண்ட் “இந்திய அணி ஜெர்ஸியை அணிவது மிகவும் இனிமையானது. இதைதான் நான் இவ்வளவு நாட்களாக இழந்ததாக உணர்கிறேன். இங்கிருந்து என் பயணம் சிறப்பாக அமையும் என நினைக்கிறேன். அணி வீரர்களுடன் இணைந்து நேரம் செலவிடுவதை மகிழ்ச்சியாக உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.