1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ravi ashwin may top the icc ranking soon

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடிக்க அஸ்வினுக்கு பிரகாசமான வாய்ப்பு!

பாட் கம்மின்ஸ்
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நாக்பூர் மைதானத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 8 விக்கெட்களை கைப்பற்றினார் அஸ்வின். இதன் மூலம் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸி அணியோடு இன்னும் மூன்று போட்டிகள் உள்ள நிலையில் அவர் சிறப்பாக வீசி விக்கெட்களைக் கைப்பற்றும் பட்சத்தில் முதல் இடத்தில் இருக்கும் பாட் கம்மின்ஸை தாண்டி முதல் இடத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. தற்போது பாட் கம்மின்ஸ் 867 புள்ளிகளோடு முதலிடத்திலும், அஸ்வின் 846 புள்ளிகளோடு இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
சில மணிநேரங்களில் பறிபோனது இந்தியாவின் முதல் இடம்… மீண்டும் முதலிடத்தில் ஆஸி!