செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (14:47 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… முகமது கைஃப் அறிவித்த ப்ளேயிங் லெவன் அணி!

இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதையொட்டி இரு அணிகளும் இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் பயிற்சியில் உள்ள. இந்த போட்டி ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் இந்திய ஆடும் லெவனில் இருக்கப் போகும் வீரர்கள் யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஏனென்றால் இந்திய அணியில் ரிஷப் பண்ட், கே எல் ராகுல் மற்றும் பூம்ரா ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர்களின் இடத்தை யாரைக் கொண்டு நிரப்பப் போகிறார் ரோஹித் ஷர்மா என்பதை அறிய ஆவலாக உள்ளனர் ரசிகர்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் தன்னுடைய ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்துள்ளார். அவரது அணி பின் வருமாறு :

ரோஹித் ஷர்மா (கே), ஷுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே, இஷன் கிஷான், ஜடேஜா, அஸ்வின்/ ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்

விக்கெட் கீப்பராக அவர் இஷான் கிஷானை தேர்வு செய்துள்ளது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. மேலும் அஸ்வின் அல்லது தாக்கூர் என சொல்லியிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.