அவுட் ஆஃப் பார்ம்: பொங்கி எழுந்த புஜாரா!

Last Updated: வெள்ளி, 27 ஜூலை 2018 (18:09 IST)
இந்தியாவின் அடுத்த டிராவிட் என்று புகழப்பட்ட புஜாரா தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடினாலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. 
 
இந்நிலையில், அவர் அவுட் ஆஃப் பார்ம் ஆகிவிட்டாரா என கேட்கப்பட்டதற்கு பின்வருமாரு பதிலளித்தார். ஒரு தனி நபராக என் மீதே நான் அதிக அழுத்தம் கொடுத்து கொள்ளக் கூடாது, நான் என்னை தவிர எதையும் யாருக்காகவும் என்னை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்று உணர்கிறேன்.
 
பெரிய பெரிய சதங்களை எடுப்பது எனது நோக்கமில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை எடுக்க விரும்புவேன். ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் பிட்ச்கள் சவாலானவை, அவுட் ஆகும் தருணங்கள் அதிகம். உத்தியில் சிறுசிறு மாற்றங்கள் தேவை.
 
எனக்கு அதற்கான பொறுமை இருக்கிறது என்றே கருதுகிறேன். சவாலான சில பிட்ச்களில் ஆடியுள்ளேன். தென் ஆப்பிரிக்காவில் ஜோஹான்னஸ்பர்கில் ஆடும்போது மிகமிகக் கடினமான பிட்ச். ஆனாலும் அதில் அரைசதம் எடுத்தேன். ஆகவே இங்கிலாந்திலும் ரன்கள் எடுக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :