வியாழன், 15 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 17 அக்டோபர் 2023 (10:47 IST)

விமர்சனங்கள் பற்றி கவலையில்லை…. ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ்!

விமர்சனங்கள் பற்றி கவலையில்லை…. ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியா அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்றதால் புள்ளிப்பட்டியலில் 10 ஆவது இடத்துக்கு சென்றது. இந்நிலையில் நேற்று இலங்கையை வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் விமர்சனங்கள் பற்றி கவலைப்படுவதில்லை எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “எங்கள் அணியினர் இன்று விளையாடிய எனர்ஜியை பார்க்க சிறப்பாக இருந்தது. இலங்கை சிறப்பாக தொடங்கினாலும், நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். எங்களைப் பற்றி வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து இரு தோல்விகளைப் பெற்ற போது பாட் கம்மின்ஸின் கேப்டன்சியை குறித்து விமர்சனம் செய்த கௌதம் கம்பீர் “பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாட தகுதியற்றவர் என்று நான் நினைக்கிறேன். பேட்டிங் பிரிவில் கேமரூன் கிரீன் பங்களிக்க முடியும் என்பதால், அவருக்குப் பதிலாக கேமரூன் கிரீனை சேர்க்கலாம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.