வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (21:15 IST)

டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியாவை அழைக்கும் பாகிஸ்தான் வீரர்

india
உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத இந்தியாவை வரவேற்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.
 


இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.  

இந்த நிலையில் நாளை இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 2வது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில்,   இறுதிப்போட்டி வரும்  நவம்பர் 13 ஆம் தேதி மெல்போர்னில் நடக்கவுள்ள நிலையில்,  நாளைய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வருவதைத் தான் வரவேற்பதாகவும், அந்தைப் போட்டியைக் காணத் தான் காத்திருப்பதாகவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ராவன்பிண்டி எஸ்பிரஸ் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ‘’இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதாமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்’’ என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தகக்கது.

Edited by Sinoj