வெள்ளி, 1 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (10:03 IST)

சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசக்கூடாது; ஷகிப் அல் ஹசன்

Shakib
சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசக் கூடாது என்றும் அது மிகப்பெரிய குற்றம் என்றும் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியுள்ளார் 
 
தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் வங்கதேச அணி தோல்வி அடைந்தது
 
இந்த நிலையில் தோல்விக்கு பின்னர் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறும்போது பேட்டிங்கை பொறுத்தவரையில் நாங்கள் கூடுதலாக 10 முதல் 15 ரன்களை எடுத்திருக்கலாம் என்றும் அதே போல் நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
 
எந்த ஒரு கேப்டனும் நோ-பால்  வீசுவதை விரும்ப மாட்டார் என்றும் குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்கள் நோ-பால்  வீசினால் அது மிகப்பெரிய குற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நாங்கள் அதிக அளவிலான நோபால் மற்றும் வைட் பந்துகளை வீசி விட்டோம் என்றும் அதனால் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்