வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (12:31 IST)

முதலமைச்சர் ஸ்டாலின் கை காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர்: அமைச்சர் துரைமுருகன்

முதலமைச்சர் ஸ்டாலின் கை காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என அமைச்சர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவருக்கு வாக்கு சேகரித்து துரைமுருகன் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளார்கள் என்றும் பிரதமர் தமிழகத்திற்கு வருவதால் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அலை வீசுகிறது என்றும் வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது என்றும் நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார்

மேலும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்றும் வேட்டி கட்டியவர் கை காட்டும் ஒருவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வர முடியும் என்றும் அவர் கூறினார்

Edited by Siva