கங்குலிக்கு பதில் புதிய பிசிசிஐ தலைவராக வரப்போவது இந்த முன்னாள் வீரர்தானா?
பிசிசிஐ தலைவர் பதவியில் கங்குலி மற்றும் செயலாளர் பதவியில் ஜெய் ஷா ஆகியோர் தொடர சமீபத்தில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் மேலும் மூன்று ஆண்டுகள் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் பதவியில் நீடிக்க முடியும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவரான சௌரவ் கங்குலி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஐசிசி தலைவராக மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை இல்லை என்றும் 51 சதவீத வாக்குகள் பெற்றாலே போதும் என்றும் புதிய விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது
இந்நிலையில் இப்போது கங்குலி பிசிசிஐ தலைவராக நீடிக்கமாட்டார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. தற்போதைய தகவல்களின் படி அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் ஐசிசிக்கான இந்திய கவுன்சிலின் பொறுப்பாளராக நியமிக்கப்பட உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி போட்டியிட உள்ளதாகவும், அவரே அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி நடக்கிறது.