புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (15:50 IST)

கேதர் ஜாதவ் சிஎஸ்கேவில் இருக்க கூடாது; பெட்டிசன் போட்ட கிரிக்கெட் ரசிகர்கள்!

நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியுற்றதற்கு கேதர் ஜாதவ் காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை அணியை விட்டு விலக்க சொல்லி ரசிகர்கள் பெட்டிசன் தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு முறை போட்டியிட்டுள்ள நிலையில் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுடனான ஆட்டத்தில் சிஎஸ்கேவிற்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்த போதும், கடைசியாக களம் இறங்கிய கேதர் ஜாதவ் டாட் பாலாக வைத்து ஓவரை வீண் செய்தார். இந்நிலையில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் சிஎஸ்கேவின் தோல்விக்கு கேதர் ஜாதவ்தான் காரணம் என ஒருபக்கம் மீம்ஸ்களும், பதிவுகளும் பறந்து கொண்டிருக்க, மறுபுறம் சிஎஸ்கேவிலிருந்து கேதர் ஜாதவை நீக்க வலியுறுத்தி நெட்டிசன்கள் பெட்டிசன் தொடங்கியுள்ளனர். இதில் பரவலாக பலர் கையெழுத்தும் இட்டு வருகின்றனர். மேலும் பலர் அடுத்த ஆட்டத்தில் கேதர் ஜாத்வ்வை சேர்க்க கூடாது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுவரை இந்த பெட்டிசனில் 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.