வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (09:25 IST)

நான்தான் சொன்னேனே.. திரும்ப வருவோம்னு..! – மரண மாஸ் காட்டிய தோனி!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப்க்கு முன்னேறியுள்ள நிலையில் தோனி பேசியது வைரலாகியுள்ளது.

அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20வது ஓவர் முடியும் முன்னரே 139 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றியது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப்க்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் வெற்றிக்கு பின் பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் தோனி “கடந்த ஆண்டு தோற்றோம் மீண்டும் வருவோம் என்றேன், அதுதான் இப்போது நடந்துள்ளது, காரணம் கடந்த முறை என்ன தவறு செய்தோம் என்பதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம். வீரர்களுக்குத்தான் பெருமை போய் சேர வேண்டும், உதவிப்பயிற்சியாளர்களுக்கும்தான்” என கூறியுள்ளார்.