செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (15:19 IST)

பார்ட் டைம் கிரிக்கெட்; ஃபுல் டைம் விவசாயம்! – வைரலாகும் தோனியின் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் பிரபலமானவரான தோனி விவசாய களத்தில் விவசாயிகளுடன் உள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த உலக கோப்பை கிரிக்கெட்டிற்கு பிறகு சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சமீப காலமாக விவசாயத்தில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றார் தோனி. சமீபத்தில் டெல்லி விவசாய போராட்டம் குறித்த சர்ச்சையின்போது தோனி டிராக்டரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியது. இந்நிலையில் தற்போது தோனி வயல் ஒன்றில் விவசாயிகளோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.