வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 மே 2021 (11:03 IST)

எல்லாரையும் அனுப்பிட்டேன்.. நானும் கிளம்புறேன்! – கேப்டனாய் கடமையை செய்த தோனி

ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ரத்தான நிலையில் சிஎஸ்கே வீரர்களை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு இன்று புறப்படுகிறார் கேப்டன் தோனி.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் ஐபிஎல் அணி வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படாத நிலையில் அனைத்து அணி வீரர்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களையும் டெல்லியிலிருந்து சார்ட்டர் விமானம் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் முதலாவதாக தனது அணி வீரர்கள் அனைவரும் தத்தமது ஊர்களுக்கு சென்றடையும் வரை தனது பயணத்தை தொடராமல் ஹோட்டலிலேயே தங்கியுள்ளார் கேப்டன் தோனி.

இன்று அனைத்து வீரர்களும் தங்களது ஊர்களுக்கு பத்திரமாக சென்றைடைந்த நிலையில் கேப்டன் தோனி இன்று சார்ட்டர் விமானம் மூலம் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு புறப்பட உள்ளார்.